தருமபுரியில் புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை,சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தருமபுரியில் ரூ.35.43 கோடியில் 591 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.ரூ. 56 கோடியில் 46 நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மேலும் ரூ. 157 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது வாழ்நாளில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தான்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மக்கள் குடிக்கும் நீரில் புளோரைடு கலந்திருந்தது. இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும், பற்களில் கறை படிவதும் இருந்து வந்தது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற என்னால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். தற்போது ரூ.4,600 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.  தருமபுரியில் தான் முதன்முதலாக மகளிர் சுய உதவிக் குழுவை கலைஞர் தொடங்கி வைத்தார். சேலம் - தருமபுரி இடையே ரூ.250 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும்.தருமபுரியில் புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும். தருமபுரியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்,என்றார்.

Related Stories: