திருக்காட்டுப்பள்ளி அருகே விடுதி காப்பாளர் கொடுமைப்படுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விடுதி காப்பாளர் கொடுமைப்படுத்தியதாக கூறி தற்கொலைக்கு முயன்ற மாணவி உயிரிழந்தார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 12 ஆம் வகுப்பு மாணவி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவியை, விடுதி காப்பாளர் வேலை செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியதால் தற்கொலை முயற்சி செய்தார். தனியார் பள்ளி விடுதி காப்பாளர் சகாயமேரியை  காவல்துறையினர் கைது செய்த நிலையில் மாணவி சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: