பெரியார் சிலைக்கு அவமரியாதை கைதான 2 பேருக்கு குண்டாஸ்

கோவை: கோவை வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பெரியார் சிலை உள்ளது. கடந்த 8ம் தேதி இரவு இந்த சிலைக்கு சிலர் அவமரியாதை செய்திருந்தனர். இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் அருண் கார்த்திக் (32), மோகன்ராஜ் (28)ஆகிய  2 பேரையும்  போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் ஆர்எஸ்எஸ் சாகா பயிற்சிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு காட்டியிருந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கைதான கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: