29 பெத்த மகராசி மபி.யில் சாவு

சியோனி : மத்திய பிரதேசத்தில் பிரசித்த பெற்ற பெஞ்ச் புலிகள் காப்பகம் உள்ளது. இதில் ஒரு  பெண் புலி  கடந்த 2008ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை  மொத்தம் 29 குட்டிகளை ஈன்றது. 2008ம் ஆண்டு முதன் முதலில் 3 குட்டிகளை பெற்றது. அவை அனைத்தும் இறந்து விட்டன. அதற்கு, அடுத்து பலமுறை குட்டிகளை ஈன்றது. அதே போல்  கடைசியாக 2018ம் ஆண்டு டிசம்பரில் 4 குட்டிகளை  பெற்றதன் மூலம் அது ஈன்ற குட்டிகளின் எண்ணிக்கை 29 ஆனது.

இந்த புலிக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டதால்  ‘காலர்வாலி’ என்றும், அதிக எண்ணிக்கையிலான குட்டிகளை ஈன்றதால் ‘சூப்பர் மாம்’ என்றும் அழைப்பார்கள். மத்திய பிரதேசத்தில் இந்த புலி மிகவும் பிரபலமானது.  பொதுவாக புலிகள் 12 ஆண்டுகள் வரை வாழும். ஆனால், இந்த புலி 17 ஆண்டுகள் வாழ்ந்துள்ளது. சமீப காலமாக  வயது மூப்பு காரணமாக காலர்வாலி புலி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. சமீபத்தில் இது இறந்தது. கடைசியாக கடந்த 14ம் தேதி அன்று வரை  இந்த புலி உயிரோடு இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: