2 தடுப்பூசி போட்ட நடிகை டிம்பிள் ஹயாதிக்கு கொரோனா

சென்னை : தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள டிம்பிள் ஹயாதி, தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘தேவி 2’ படத்தில் நடித்திருந்தார். தற்போது விஷால் ஜோடியாக ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த 14ம் ேததி சென்னையில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற டிம்பிள் ஹயாதி, நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தனக்கு கொரேனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். ஏற்கனவே நான் 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டேன். அப்படி இருந்தும் தொற்று ஏற்பட்டுள்ளது’ என்றார். வில்லன் நடிகர் சம்பத்ராமுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: