வடலூர் சத்திய ஞானசபையில் நாளை ஜோதி தரிசன விழா

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு ஆணையின்படி 18ம் தேதி (நாளை) வடலூர் சத்திய ஞானசபையில் காலை 6 மணி, 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பக்தர்கள் பங்கேற்பின்றி ஜோதி தரிசன விழா நடைபெறும்.

19ம் தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனம் மற்றும் 20ம் ேததி மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் திருஅறை தரிசன நிகழ்ச்சிகளுக்கு மிக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தைப்பூசம் ஜோதி தரிசனத்தை 18ம் தேதி காலை 6, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7, 10 மணி மற்றும் 19ம் தேதி காலை 5.30 மணி என ஆறு காலங்களிலும் வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனல் https://www.youtube.com/channel-லில் நேரலையிலும் மற்றும் டிவி வாயிலாக காணலாம்.

Related Stories: