திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை பாடப்படும். தொடர்ந்து, நித்திய கைங்கரியங்களான தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்துக்கு பதிலாக ஆண்டாள் எழுதிப்பாடிய, ‘திருப்பாவை பாசுரங்கள்’ தமிழில் பாடப்பட்டு நித்ய பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி மார்கழி (தனுர்) தொடங்கியது. இதனால், டிசம்பர் 17ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு, ‘திருப்பாவை பாசுரங்கள்’ பாடப்பட்டு வந்தது. பின்னர், மார்கழி மாதம் நிறைவு பெற்று தை மாதம் பிறந்ததை தொடர்ந்து ஏழுமலையான் கோயிலில் நேற்று முதல் மீண்டும் சுப்ரபாத சேவையுடன் வழிபாடுகள் தொடங்கியது. பொங்கல்  பண்டிகை நாளான நேற்று முன்தினம் உண்டியலில் ₹2.13 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.

Related Stories: