முகக்கவசம் அணியும்படி கூறிய போலீஸ்காரருக்கு பளார் மாணவன் கைது

பெரம்பூர் : புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த உத்திரகுமார் (31), கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை எம்.ஆர்.நகர் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, முகக்கவசம் அணியாமல் பைக்கில் வந்த வாலிபரை மடக்கி, முகக்கவசம் அணிந்து செல்லும்படி கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபர், தகராறில் ஈடுபட்டு உத்திரகுமார் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, வியாசர்பாடி புதுநகர் 8வது தெரு பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் (21) என்பதும், சட்டக்கல்லூரி மாணவன் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: