12 வகுப்பு தேர்வை ரத்து பண்ணிட்டீங்க… பார்ட்டியும் நடத்த அனுமதி தந்தா நேகாவை பார்ப்பேன்: மோடிக்கு மாணவர் விடுத்த கோரிக்கை வைரல்

புதுடெல்லி: கொரோனா 2 அலை தீவிரத்தால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கொண்டாட்டம் களைகட்டியது. பலரும் நகைச்சுவை, மீம்ஸ் என குறுஞ்செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர் ஒருவர், பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கும்படி பிரதருக்கு கோரிக்கை விடுத்து டிவிட்டரில்  பதிவிட்டுள்ள செய்தி வைரலாகி இருக்கிறது. தேர்வு ரத்து குறித்த பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்திக்கு பதில் அளித்துள்ள மாணவன் ஒருவர், ‘சார்… அப்படியே கொஞ்சம் பிரிவு உபச்சார விழா நடத்துவதற்கு அனுமதி தாருங்கள், நான் 12ம் வகுப்பு பி பிரிவில் படிக்கும் நேகா (மாணவி) புடவை அணிந்து வருவதை பார்ப்பதற்கு ஆசைப்படுகிறேன்…’ என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மாணவனின் இந்த டிவிட் வைரலாகி இருக்கிறது. இதற்கு ஏராளமானவர்கள் ‘லைக்’கை அள்ளி விட்டுள்ளனர்….

The post 12 வகுப்பு தேர்வை ரத்து பண்ணிட்டீங்க… பார்ட்டியும் நடத்த அனுமதி தந்தா நேகாவை பார்ப்பேன்: மோடிக்கு மாணவர் விடுத்த கோரிக்கை வைரல் appeared first on Dinakaran.

Related Stories: