நீங்கள் முக கவசம் அணிந்தால் நாங்கள் லாக்டவுன் கொண்டு வர மாட்டோம்: லாக்டவுனைப் பற்றி இப்போதைக்கு எந்த நோக்கமும் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரேனானா காரணமாக  நாளை  (ஜனவரி 10) ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றன. இன்றைய சுகாதார செய்திக்குறிப்பில் சுமார் 22,000 வழக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தொற்று அதிகரித்து வருகின்றன, ஆனால் பயப்பட தேவையில்லை. கடைசி அலையிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்து (ஒப்பிட்டு) நான் அப்படிச் சொல்கிறேன் என கூறினார். இந்த முறை, தினசரி இறப்புகள் இரண்டாவது கொரோன  அலையை விட ஒப்பீட்டளவில் மிகக் குறைவு எனவும் தெரிவித்தார். நாங்கள் லாக்டவுன் கொண்டு வர விரும்பவில்லை. நீங்கள் முக கவசம் அணிந்தால் நாங்கள் லாக்டவுன் கொண்டு வர மாட்டோம்.

லாக்டவுனைப் பற்றி இப்போதைக்கு எந்த நோக்கமும் இல்லை என கூறினார். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகாண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.கொரோனா காரணமாக இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தது. 7-8 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, நான் மீண்டும் உங்கள் சேவைக்கு வந்துள்ளேன்; இப்போது நன்றாக இருக்கிறேன் என கூறினார்.

Related Stories: