எம்பி ரூ.95 லட்சம், எம்எல்ஏ ரூ.40 லட்சம் வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு: 5 மாநில தேர்தலில் அமல்

புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவிடும் தொகையை அதிகரித்து ஒன்றிய சட்ட அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் ₹70 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த தொகையானது தற்போது ₹95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல, சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் ₹28 லட்சம் வரை ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக செலவு செய்யலாம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த செலவு வரம்பு தற்போது ₹40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செலவு உச்சவரம்பு நிர்ணயம், தேர்தல் நடைபெற இருக்கும் உ.பி., குஜராத், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த செலவு உச்சவரம்பு ஒன்றிய சட்ட அமைச்சகத்தால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: