நிலம் வாங்கி தருவதாக கூறி ஆண் சாமியாரிடம் 60 பவுன் மோசடி பெண் சாமியார் அதிரடி கைது

வத்தலக்குண்டு: ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி 60 பவுன், ரூ.5.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் திண்டுக்கல் பெண் சாமியார் மற்றும் அவரது தங்கை கைதாயினர். திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியில் வசித்து வருபவர் பபிதா என்ற பவித்ரா (42). இவர் தன்னை காளி என கூறிக்கொண்டு திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜ்களில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம், கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் மற்றும் 60 பவுன் நகையை பெற்று ஏமாற்றிள்ளார்.

இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தவயோகி புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பவித்ராவை தேடி வந்தனர். இந்நிலையில் பவித்ரா, திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக நிலக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட் தலைமையிலான தனிப்படையினர், அங்கு சென்று பவித்ரா மற்றும் அவரது தங்கை ரூபாவதி ஆகிய இருவரையும் கைது செய்து நிலக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: