வத்திராயிருப்பு அருகே ராமசாமியாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், பிளவக்கல் அணை, நெடுங்குளம், மகாராஜபுரம், மாத்துார், ரெங்கபாளையம், புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், கோட்டையூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூடப்பட்டிருந்த ராமசாமியாபுரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதனை வேளாண் நேர்முக உதவியாளர் சங்கர நாராயணன் திறந்து வைத்தார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லிற்கு கூடுதல் விலை கிடைக்கிறது. வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு போட வேண்டிய நிலை உள்ளது. அதில் சிலர் ரூபாய்க்கு அலைய விடுகின்றனர். நாங்கள் அரசு கொள்முதல் நிலையத்தில்தான் நெல்லை விற்பனை செய்வோம். உரிய நேரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என்றனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: