திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு உற்சவங்கள் நடக்கும். அதன்படி, வருகிற ஜனவரியில் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது. இதில், 2-ம் தேதி விசேஷ உற்சவம், 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி, கோயில் சந்நிதியில் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. 14-ம் தேதி வைகுண்ட துவாதசி, தெப்பகுளத்தில் சக்கரத்தீர்த்த முக்கொட்டி, ஜனவரி 15-ம் தேதி மகர சங்கிராந்தி, 16 அன்று கோதா பரிணயோற்சவம், வாரி பார்வேட்டை உற்சவம், 17-ம் தேதியன்று ராமகிருஷ்ண தீர்த்த முக்கொட்டி, 18-ம் தேதி பிரணய கலகோற்சவம் நடக்கிறது.
