உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

உடுமலை: உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு குருமலை, குழிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உற்பத்தியாகின்ற பல்வேறு சிற்றாறுகள் நீராதாரமாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது சிற்றாறுகளில் நீர்வரத்து

ஏற்பட்டு பஞ்சலிங்க அருவிக்கு வந்து சேர்கிறது.

அடர்ந்த வனப்பகுதியின் வழியாக சிற்றாறுகள் மூலம் நீர்வரத்து உள்ளதால் பல்வேறு மூலிகைகள் தண்ணீர் கலந்து அருவியில் விழும் தண்ணீரில் குளிப்பதால் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைகிறது. இதனால், அருவியில் குளிக்க பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இரேந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல  தடைவிதிக்கப்பட்டிருந்தது. பல்வேறு தளர்வுகள் படிப்படியாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சலிங்க அருவி, கோவில் வளாகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: