வழக்கறிஞர்கள் தவறு செய்தாலும் கோபப்படக்கூடாது நீதிபதிகள் மக்களை தேடிச்சென்று நீதி வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேசுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், எம்.கோவிந்தராஜ், ஜி.கே.இளந்திரையன், ஜெ.சத்திய நாராயண பிரசாத், உள்ளிட்ட நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மூத்த வக்கீல் விடுதலை, ஆர்.சி.பால்கனகராஜ், அய்யப்பமணி மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும் பார்கவுன்சில் இணை தலைவருமான ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், பார்கவுன்சில் செயற்குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், ஐகோர்ட் நீதிபதிகள் சி.சரவணன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதி என்.சேஷசாயி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஆர்.சுரேஷ்குமார், வி.பாரதிதாசன், டி.ராஜா, மூத்த நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.  விழாவில் ஏற்புரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது. மக்களை தேடிச்சென்று நீதி வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: