உத்திரபிரதேசத்தில் சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருமானவரித்துறை சோதனை: பாஜகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக அகிலேஷ் யாதவ் விமர்சனம்

உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசத்தில் சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு நெருக்கமானவர் வீட்டில் வருமானவரித்துறையினர் காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜிவ் ராய்க்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் வருமானவரித்துறையின் சோதனை பாஜகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். வருமானவரித்துறை சோதனைகளால் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் பரப்புரையை எந்த விதத்திலும் முடக்க முடியாது என்று  அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

தனக்கு நெருக்கமானவர்கள் மீது பாஜக வருமானவரித்துறை சோதனையை ஏவி விட வேண்டுமென்றால் உத்திரபிரதேசத்தில் உள்ள 22 கோடி மக்களின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார். 403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச சட்ட பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: