7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது: கி.வீரமணி குற்றச்சாட்டு

மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை சர்ச்சையாக உள்ளது. விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 2018ம் ஆண்டில் இருந்து 7 பேர் விடுதலை சர்ச்சையாக உள்ளது. விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய முடிவை விரைவாக எடுக்க வேண்டும். இந்த பிரச்னையில், தமிழக அரசின் நடவடிக்கைகளை குறை சொல்ல முடியாது. தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது. தமிழகத்தில் பொது மயானங்களை உருவாக்க வேண்டும். ஜாதி வேறுபாடுகள் இல்லாத மயானங்களாக தமிழக அரசு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: