இன்று கடைசி நாள் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்கள் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்கள் செங்கை ராகுல்நாத், காஞ்சி ஆர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்காக கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இதையொட்டி, 2022ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார்  விருதுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மதக் கலவரத்தின்போது, மற்ற மதத்தினரின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்றுதல் மற்றும் சமூக தொண்டு புரிபவர்கள், நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவர்களின் கருத்துருக்கள் மற்றும் விண்ணப்பம் ஆகியவற்றை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: