ரயில் அபாய சங்கிலியை இழுத்தவருக்கு அபராதம்

ஆலந்தூர்: தாம்பரத்தில் இருந்து நேற்று மின்சார ரயில் பரங்கிமலை ரயில்நிலையம் வந்தது. பின்னர் மீண்டும் புறப்பட்டபோது அபாயச்சங்கிலியை ஒருவர் திடீரென பிடித்து இழுத்துள்ளார். இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அவரிடம் கேட்டனர். அவருக்கு தமிழ் பேசத் தெரியாததால் விழித்தபடி பரிதாபமாக நின்றுள்ளான். தகவலறிந்த பரங்கிமலை ரயில்வே போலீசார், அந்த நபரை காவல்நிலையம் கொண்டு வந்தனர். அதில் ஐதராபாத்தை சேர்ந்த  பெர்னாண்டஸ்(30) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு பரங்கிமலையில் நண்பரை பார்க்க வந்துள்ளார். ரயில் நிலையத்தை தவறவிட்டதால் பயத்தில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.

Related Stories:

More