குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவனுக்கு வலை

புழல்: புழல் லட்சுமி அம்மன் கோயில் 1வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சபரிதா(29). இருவரும் மீஞ்சூர் வெங்கடாரெட்டி பகுதியை சேர்ந்தவர்கள். இந்த வீட்டில் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர். இதில், தமிழரசன் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தமிழரசன் தனது மாமனார் ராமமூர்த்திக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது மனைவியை கொலை செய்து விட்டதாக  தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பதறிப்போன, ராமமூர்த்தி புழல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே, புழல் போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் நேற்று மதியம் வீட்டிற்கு  விரைந்து ெசன்றனர். அப்போது,  அவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சபரிதா கழுத்தை நெரித்து கொலை செய்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தததால் கொலை நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தப்பியோடிய தமிழரசனை தீவிரமாக தேடி  வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More