ஆவடியில் பள்ளி மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதல்..பொதுமக்கள் தடுத்தும் சண்டையை நிறுத்தாத மாணவிகள்!!

சென்னை : ஆவடியில் பள்ளி மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மோதலில் ஈடுபட்டது ஆவடி காமராஜர் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் என தெரியவந்துள்ளது. அந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஆவடி பேருந்து பணிமனையில் நின்ற போது திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

 

 மாணவிகள் மோதிக்கொள்வதை பார்த்த பொது மக்கள் அவர்களை தடுக்கமுயன்றனர், அதையும் மீறி ஒருவரையொருவர் முடியை பிடித்து இழுத்து பலமாக தாக்கிக்கொண்டனர். அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. பள்ளியில் நேற்று நடைபெற்ற மாதாந்திர தேர்வுக்கு வந்த மாணவிகள் அடிதடியில் இறங்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More