ஊழியரிடம் வழிப்பறி

ஆவடி: மிட்டனமல்லி ராகவா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம்(55). ஆவடி டேங்க் பேக்டரியில் ஊழியர். நேற்று மதியம் ஆவடி சி.டி.எச் சாலையில் உள்ள வங்கிக்கு சென்று ₹75 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் பணத்தை வைத்து புறப்பட்டார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் `நான்கு பத்து ரூபாய் நோட்டுகள் கிடக்கிறது, அந்த பணம் உங்களுடையதா’ என கேட்டு அவரது கவனத்தை திசைதிருப்பி உள்ளார்.

இதனையடுத்து, மகாலிங்கம் குனிந்து கீழே பார்த்தபோது மர்ம நபர் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த பணத்தை எடுத்தார். மகாலிங்கம் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். ஆனால், அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி தலைமறைவாகினார்.

புகாரின்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

More