வலங்கைமான் பேரூராட்சி எம்கே நகர் பகுதியில் சாலையின் மையத்தில் பயன்பாடற்ற சோடியம் மின்விளக்கு கம்பம்-அகற்ற மக்கள் வலியுறுத்தல்

வலங்கைமான் : வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட எம்கே நகர் பகுதியில் சாலையின் மைய பரப்பில் விபத்தினை ஏற்படுத்தும் விதமாக பயன்பாடு இல்லாமல் உள்ள சோடியம் மின்விளக்கு கம்பத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில்பேரூராட்சியின் சார்பில் சோடியம் மின்விளக்குகள் பொருத்தும் வகையில் உருளை வடிவ இரும்பினாலான மின்கம்பங்கள் நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டது.

இருப்பினும் ஒரு சில ஆண்டிற்கு பிறகு அவைகள் அனைத்தும் செயல்பாடு அற்ற நிலையில் வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. இந்த மின்கம்பங்களில் அடிபகுதிகள் பழுதடைந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் பல இடங்களில் மின்கம்பங்கள் உள்ளன .வலங்கைமான் பள்ளிவாசல் அருகே உள்ள மின் கம்பம் மையப்பகுதி முறிந்து சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறான வகையில்உள்ளது.

அதேபோன்று வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள எம்கே நகர் செல்லும் சாலையின் மைய பரப்பில் மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பயன்பாடற்ற நிலையில் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வலங்கைமான் பேரூராட்சி பகுதிகளில் பல இடங்களில் பழுதடைந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் மின்கம்பங்களை அடையாளங்கண்டு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: