மக்களவையில் ஒன்றிய அரசு கோரிக்கை நடப்பாண்டில் கூடுதல் செலவுக்கு ரூ.3.73 லட்சம் கோடி வேண்டும்: ஏர்-இந்தியாவுக்கு மட்டுமே ரூ.62 ஆயிரம் கோடி

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ரூ.3.73 லட்சம் கோடி கூடுதல் செலவினத்துக்கான துணை மானிய கோரிக்கையை மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. மக்களவையில், 2021-22ம் நிதியாண்டுக்கான துணை மானியக் கோரிக்கையின் 2வது தொகுப்பை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று தாக்கல் செய்தார். அதில் ரூ.3.73 லட்சம் கோடி கூடுதல் செலவினத்திற்கான நாடாளுமன்ற ஒப்புதலை அவர் கோரி உள்ளார். துணை மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* கூடுதல் உர மானியத்திற்கு ரூ.58,430 கோடியும், நிலுவையில் உள்ள ஏற்றுமதி ஊக்கத் தொகை வழங்கிட ரூ.53,123 கோடியும், தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்காக கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு வழங்கிட ரூ.22,039 கோடியும் கேட்கப்பட்டுள்ளது.

* தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் சொத்துக்களை தக்க வைத்துக் கொள்ள, அதன் முந்தைய கடன்களை அடைக்க ரூ.62,057 கோடி கேட்கப்பட்டுள்ளது.

* உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.49,805 கோடியும், பொருளாதார துறைக்கு ரூ.2,400 கோடியும், பாதுகாப்பு துறைக்கு ரூ.5,000 கோடி, உள்துறைக்கு ரூ.4,000 கோடியும் கூடுதல் செலவினமாக கேட்கப்பட்டுள்ளது.

*  இதன்படி மொத்தம் ரூ.2.99 லட்சம் கோடிக்கான நிதி கேட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.74,517 கோடி பிற அமைச்சகங்கள் சேமித்த நிதியிலிருந்து பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More