வகுப்பறையில் ஆபாச வார்த்தை: அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

கரூர்: வகுப்பறையில் ஆபாச வார்த்தை பேசி பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்ப ட்டார். கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் பாகநத்தத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் பன்னீர் செல்வம்(46), அறிவியல் பாடத்தில் உள்ள ஒரு பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள் எழுத்து பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில், தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் ரமணி பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். இவரின் விசாரணையின் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில், மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன், ஆசிரியர் பன்னீர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More