முகக்கவசம், கையுறை தயாரிப்பதாக 3.2 கோடி நூதன மோசடி: முக்கிய குற்றவாளி கைது

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையை சேர்ந்த கண்ணன், கடந்த பிப்ரவரி மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐடிஐ லிமிட்டெட் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல பொது மேலாளர் பதவியில் இருந்த கே.வி.என்.ராஜன் என்பவர், எனக்கு பழக்கமானார்.  இவர், அரசு மருத்துவமனைகளுக்கு முக்கக்கவசம்  மற்றும் கையுறைகளை கொள்முதல் செய்ய தங்கள் நிறுவனத்திற்கு ஆர்டர் கிடைத்துள்ளது. அதன்படி செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

ஆனால், அரசு நிறுவனம் என்பதால் முன் பணம் செலுத்த எங்களால் இயலாது. நீங்கள் பணம் கொடுத்து உதவினால், லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். அதன்படி, அவர் தெரிவித்த தொழிற்சாலைக்கு 3.2 கோடி செலுத்தினேன். பின்னர், ராஜன் என்னை ஏமாற்றியது தெரிந்தது. அவரிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும், என தெரிவித்து இருந்தார். போலீசார் விசாரணையில், ராஜன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 3.20 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. அவரை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி கைது செய்தனர்.  இந்த வழக்கில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த கே.வி.என்.ராஜன் நண்பரான தனியார் நிறுவன உரிமையாளர் ஆலந்தூர் மடுவங்கரை 5வது தெருவை சேர்ந்த ஞானபிரகாசத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories:

More