எவ்வளவு பணம் இருந்தாலும் போதாது உலகளவில் வாழ அதிக செலவாகும் நகரங்களில் டெல் அவிவ் முதலிடம்: பொருளாதார நிபுணர் குழு அறிக்கை

லண்டன்: உலகில் வாழ்வதற்கு  அதிகம் செலவாகும் நகரங்களில், இஸ்ரேலில் உள்ள ெடல் அவிவ் முதலிடம் பிடித்துள்ளது. உலக நாடுகளில் உள்ள பெரிய நகரங்களில் வாழ்வதற்கு தேவையான பொருளாதாரம் குறித்தும், வாழ்வதற்கான  செலவுகள் குறித்தும் 173 நகரங்களில் உலக பொருளாதார நிபுணர் குழு ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையின்படி, உலகின் வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில் இருந்து பாரீஸ், சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளி, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்நாட்டு நாணயமான ஷேக்கலின் வலிமை, போக்குவரத்து செலவு, மளிகை பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக டெல் அவிவ் தனது தரவரிசையில் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு பட்டியலில், பாரீஸ், சூரிச், ஹாங்காங் ஆகிய நகரங்கள் கூட்டாக முதலிடத்தில் இருந்தன. இந்தாண்டு பட்டியலில் பாரீசும், சிங்கப்பூரும் கூட்டாக 2வது இடத்திலும், சூரிச், ஹாங்காங், நியூயார்க் 6வது இடத்திலும், ஜெனீவா 7வது இடத்திலும் உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் 9வது இடத்திலும், ஒசாகா 10வது இடத்திலும் உள்ளன.

பொருளாதார நிபுணர் குழு அறிக்கைப்படி சிரியாவின் டமாஸ்கஸ், செலவினங்களில் மிக மலிவான நகரமாக இருக்கிறது. இந்திய நகரங்களில் மலிவான நகர பட்டியலில் அகமதாபாத் 7வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி 6வது இடத்தில் உள்ளது. இது குறித்து பொருளாதார நிபுணர் குழுவின் சர்வதேச தலைவர் உபாசனா தத் கூறுகையில், ‘‘கொரோனா காரணமாக சமூக கட்டுப்பாடுகள், பொருட்களின் விநியோகத்தை சீர்குலைத்தது. இது பற்றாக்குறை, விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளன. இந்தாண்டு செலவு குறியீட்டில் இதன் தாக்கத்தை காண முடிகிறது,’’ என்றார்.

அதிகம் செலவாகும் நகரங்கள்

1. டெல் அவிவ் (இஸ்ரேல்)

2.   பாரீஸ் (பிரான்ஸ்௸

3 சிங்கப்பூர் சிங்கப்பூர்

4 ஜூரிச் (சுவிட்சர்லாந்து)

5. ஹாங்காங் (சீனா)

6. நியூயார்க் (அமெரிக்கா)

7. ஜெனீவா (சுவிட்சர்லாந்து)

8. கோபன்ஹேகன் (டென்மார்க்)

9. லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா)

10. ஒசாகா (ஜப்பான்)

செலவு குறைவான நகரங்கள்

1. டமாஸ்கஸ் (சிரியா)

2. திரிபோலி (லிபியா)

3. தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்)

4. துனிஸ் (துனிசியா)

5. அல்மாட்டி (கஜகஸ்தான்)

6. கராச்சி (பாகிஸ்தான்)

7. அகமதாபாத் (இந்தியா)

8. அல்ஜியர்ஸ் (அல்ஜீரியா)

9. பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா)

10. லுசாகா (சாம்பியா)

Related Stories:

More