ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 68 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் நிகர நேரடி வரி வருவாய், நடப்பு நிதியாண்டில் இதுவரை 68 சதவீதம் உயர்ந்து, 6.92 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக, ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது:  நடப்பு நிதியாண்டில் கடந்த 23ம் தேதி வரை 6,92,833.6 கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 67.93 சதவீதம் உயர்வு. ரீபண்ட்டுக்கு முன்பு இந்த வருவாய் 8.15 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது. இது 48.11 உயர்வாகும்.

இதுமட்டுமின்றி, நடப்பு நிதியாண்டில் கொரோனாவுக்கு பிறகு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது. கடந்த 2020-21 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 11.36 லட்சம் கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை மட்டும் 8.10 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: