வௌ்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி மீட்பு

திருத்தணி: கனமழையால் திருத்தணி - பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள அமிர்தாபுரம் ஏரியில் மழைநீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில், அமிர்தாபுரம் திருவள்ளூர் சேர்ந்தவர் வினோத்குமார். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபா(25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று வீட்டில் சீமந்த நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் தீபாவின் தாய் வீட்டுக்கு அவரை அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்தது.

இதற்கிடையே, வெள்ளப்பெருக்கால் வினோத்குமார் மற்றும் அவரது அருகில் உள்ள மற்றொரு வீட்டை வௌ்ளநீர் 2 அடி வரை சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர். தகவலறிந்த திருத்தணி தீயணைப்பு அலுவலர் அரசு தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ரப்பர் படகு மூலம் கர்ப்பிணி தீபா மற்றும் இரண்டு வீடுகளில் இருந்து உள்பட 7 பேரை பத்திரமாக மீட்டனர்.

Related Stories:

More