வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் பாகிஸ்தான் உறுதியான ஆட்டம்

சாட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில், பாகிஸ்தான்  முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 145 ரன் சேர்த்துள்ளது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தாஸ் 114, முஷ்பிகுர் 91, மெஹிதி ஹசன் 38* ரன் விளாசினர். பாக். தரப்பில் ஹசன் அலி 5, ஷாகீன் அப்ரிடி, பாகீம் அஷ்ரப் தலா 2, சாஜித்கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்ட முடிவில்  விக்கெட் இழப்பின்றி 145 ரன் எடுத்துள்ளது (57 ஓவர்). அபித் அலி 93 ரன் (180 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்),  அப்துல்லா ஷபிக்  52 ரன்னுடன் (162 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

More