பள்ளி மாணவிக்கு டார்ச்சர் போக்சோவில் ஆசிரியர் கைது

பழநி: பழநி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் நாட்ராயன் (30). திருமணம் ஆகாதவர். இவர் அமரப்பூண்டியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆயக்குடி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ஆசிரியர் நாட்ராயனை கைது செய்தனர்.

Related Stories:

More