கொரோனாவால் 20 மாதமாக ரத்து மன்னார்குடி- மானாமதுரை ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும்

*மாணவர்கள், வர்த்தகர்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி : கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 20 மாதகாலமாக நிறுத்தப்பட்டுள்ள மன்னார்குடியில் இருந்து திருச்சி வழியாக மானாமதுரை செல்லும் பயணி கள் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், மாணவர் கள் மற்றும் வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கொரானா வைரஸ் முதல் அலை வீச துவங்கிய போது தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து கடந்தாண்டு மார்ச் 23 ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதன் பின் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிற ப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து மாநில அரசுகளின் கோரிக்கை களுக்கு ஏற்ப சிறப்பு ரயில்களை வாரியம் இயக்க துவங்கியது.

அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு கொரோனா முதல் அலை முடிவுக்கு வந்த சமயத்தில் டிசம்பர் 8ம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட பல்வேறு ரயில்கள் கடந்த மே மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை கடுமையாக வீச துவங்கியதால் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. தற்போது 2 வது அலையின் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து ரயில்கள் பழைய அட்டவணை படி இயங்கி வருகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல அனைத்து ரயில்களும் இனி இயக்கப்படும் என்று ரயில்வே அமைச் சகம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. முன்பதிவு இல்லாமல் பயணிகள் விரைவு ரயில்களில் பயணம் செய்ய கூடுதல் பெட்டிகளை பல ரயில்களில் இணைத்துள்ளது. புறநகர் ரயில்களிலும் அனைத்து பயணிகளும் வழக்கம் போல் பயணம் செய்ய அனுமதி தந் திருக்கிறது.

இந்த நிலையில், மன்னார்குடி - மானாமதுரை ( வ. எண் : 76806, மறு மார்க்கத்தில் வ. எண் 76805) இடையே திருச்சி வழியாக இயங்கும் பயணிகள் ரயில் சேவையை இயக்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தெற்கு ரயில்வே மவுனம் காத்து வருகிறது. மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக் கும் மக்கள், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நாள்தோறும் வேலைக்கு செல்வதற்கும் இந்த ரயில் சேவை மிகவும் உதவிகரமாக இருந்து வந்தது.

எனவே, கடந்த 20 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மன்னார்குடி - மானா மதுரை இடையே திருச்சி வழியாக செல்லும் இந்த ரயில் சேவையை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு விரைவில் வெளியிட வேண்டும்? என மன் னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களை சேர்ந்த ரயில் பயணிகள், மாண வர்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: