கனமழை காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூரில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கடலூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடியிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. ஆவடியில் 20 செ.மீ, சோழவரத்தில் 15 செ.மீ, திருவள்ளூரில் 13 செ.மீ, பொன்னேரியில் 12 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 12, செம்பரம்பாக்கத்தில் 12, ஸ்ரீபெரும்புதூரில் 10, உத்திரமேரூரில் 9 செ.மீ மழை பதிவானது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More