சீக்கியர்கள் பற்றி அவதூறு கருத்து நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி சட்டப்பேரவை சம்மன்

புதுடெல்லி: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பிரதமர், பாஜ.வுக்கு ஆதரவானக் கருத்துக்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டுதான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. 1947ம் ஆண்டில் கிடைத்தது `பிச்சை’ என்று கூறியிருந்தார். மேலும், `ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டினால் பிச்சை,’ என்ற வகையில் பேசியிருந்தார்.

இவர் இப்படி அவதூறாக பேசி வருவதைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கிய பத்ம விருதினை அரசு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் அரசை வலியுறுத்தினர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சீக்கியர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என அவதூறாக கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக வரும் 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, கங்கனா ரனாவத்துக்கு  டெல்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories: