நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மதிமுக பிரதிநிதிகள் சுற்றுப்பயணம்

சென்னை: மதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் மதிமுகவினர் விருப்ப மனுக்களை பெறுவதற்கு தலைமைக் கழகப் பிரதிநிதிகள் கீழ்காணும் முறைப்படி நவம்பர் 29க்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புவோர் தங்கள் விருப்ப மனுக்களை தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேட்புமனு கட்டணமாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ.1,000ம், நகராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ.500, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா-வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு, தென்சென்னை கிழக்கு, தென்சென்னை மேற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு கிழக்கு, திருவள்ளூர், மு.செந்திலதிபன்- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, செஞ்சி ஏ.கே.மணி- விழுப்புரம் வடக்கு, தெற்கு (கள்ளக்குறிச்சி) கடலூர், கு.சின்னப்பா- அரியலூர்-பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், மயிலாடுதுறை, புதூர் மு.பூமிநாதன்- மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், ஆ.வந்தியத்தேவன்-ஈரோடு, திருப்பூர், ஆவடி ரா.அந்திரிதாஸ்-கோவை, நீலகிரி, சதன் திருமலைக்குமார்-விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கவிஞர் மா.மணிவேந்தன்- சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

Related Stories: