பிஎஸ்எப் அதிகாரம் ஒன்றிய அரசு உத்தரவை எதிர்த்து பஞ்சாப் தீர்மானம்

சண்டிகர்: பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) ஈடுபட்டுள்ளது. இதன் எல்லை அதிகார வரம்பை கடந்த மாதம் ஒன்றிய அரசு மாற்றி அமைத்தது. இதன்படி, பஞ்சாப்பில் 15 கிமீ.யாக இருந்த இதன் அதிகார வரம்பு 50 கிமீ.யாக  அதிகரிக்கப்பட்டது.  இதன்படி, இம்மாநிலத்தில் சர்வதேச எல்லையில் இருந்து 50 கிமீ தூரம் வரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முன் அனுமதி இன்றி யாரையும் விசாரிக்கலாம், கைது செய்யலாம், சோதனைகள் நடத்தலாம். இதற்கு, பஞ்சாப் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது, மாநில போலீசாருக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஒன்றிய அரசு வலியுறுத்தியது. இந்நிலையில், இந்த உத்தரவை நிராகரித்து இம்மாநில சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இம்மாநிலத்தை சேர்ந்த 2 பாஜ எம்எல்ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

Related Stories: