முஷ்டாக் அலி கோப்பை டி20 கோவா அதிரடி வெற்றி: தமிழகத்துக்கு முதல் தோல்வி

லக்னோ: சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற தமிழக அணி, முதல்முறையாக கோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. உள்நாட்டு டி20 தொடரான இதில் தமிழக அணி எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். அதற்கேற்ப நவ.4ம் தேதி தொடங்கிய நடப்புத் தொடரிலும் எலைட் ஏ பிரிவில் உள்ள விஜய்சங்கர் தலைமையிலான தமிழக அணி முதலில் மகராஷ்டிராவை 12 ரன் வித்தியாசத்திலும், அடுத்து ஓடிஷாவை 1 ரன்னிலும், புதுச்சேரியை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் 4வது லீக் ஆட்டத்தில் நேற்று கோவா அணியை எதிர்கொண்டது.

லக்னோ, வாஜ்பாய் அரங்கில் டாஸ் வென்ற கோவா பந்துவீசியது. தமிழகம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது. ஷாருக் கான் 26, ஜெகதீசன் 21, சஞ்ஜெய் யாதவ் 38 ரன் எடுத்தனர். கோவா தரப்பில்  ஸ்ரீகாந்த் வாக் 4 விக்கெட் அள்ளினார். அடுத்து களமிறங்கிய கோவா 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் குவித்து 2வது வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் ஷூப்மன் 52* (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்),  சுயாஷ் பிரபு 43* (24 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்)  ரன் விளாசி கடைசிவரை களத்தில் இருந்தனர். ஆதித்யா 41 ரன் எடுத்தார். தமிழகம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

Related Stories: