ஓடும் பஸ்சில் 20 சவரன் அபேஸ்: 4 பெண்களுக்கு வலை

ஆவடி: ஆவடி, புதிய வெள்ளானூர், ஸ்ரீசீனிவாச நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (40). ஆவடி பாதுகாப்பு துறை நிறுவனமான இன்ஜின் பேக்டரி ஊழியர். இவரது மனைவி ராதா (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 25ம் தேதி ராதா, தனது 2 குழந்தைகளுடன் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டின் திருமணத்துக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து மீண்டும் தனியார் பஸ் மூலம் ஆவடிக்கு புறப்பட்டார். அவரது இருக்கைக்கு அருகே கைப்பையில் 20 சவரன் தங்க நகைகள் வைத்திருந்தார். அவர் பயணம் செய்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், ராதாவின் இருக்கையை சுற்றி 4 பெண்கள் நின்றிருந்தனர்.

ஆவடி பஸ் நிலையம் வந்ததும் ராதா, குழந்தைகளுடன் கீழே இறங்கினார். அப்போது அவர், தனது கைப்பையில் பார்த்தபோது, அதில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி ஆவடி இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், ராதாவின் அருகில் நின்றிருந்த பெண்கள் கைப்பையில் இருந்த நகைகளை திருடியது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், 4 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>