உடுமலைப்பேட்டை அருகே ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: ஏடிஎம்-யை உடைக்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியீடு

திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஏரிப்பாளையம் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியுடன் உள்ளே நுழைந்து ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.

அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இருப்பினும் இயந்திரத்தில் உள்ள பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. இதனால் அங்கிருந்து உடனடியாக தப்பிவிட்டார். இதுகுறித்து உடுமலைப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியை சுற்றியுள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நபரை தேடும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More
>