தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் இந்த முறை மன்னிக்கிறோம் இனி, பார்த்து நடந்துக்குங்க... அசாம் முதல்வருக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: அசாம் மாநிலத்தில், கோசைகான், பாபனிப்பூர், தமுல்பூர், மரியானி மற்றும் தவ்ரா ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, இம்மாநில முதல்வர் ஹேமந்த் சர்மா பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவ கல்லூரிகள், பாலங்கள், சாலை, உயர்நிலை பள்ளிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். மேலும், சுயஉதவி குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் நடத்ைத விதிகளை மீறியதாக முதல்வர் சர்மா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த திங்களன்று அவருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, தன் மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்து பதில் அளித்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘பாஜ.வின் நட்சத்திர பிரசாரகரான ஹேமந்த் சர்மா, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. இப்போது, அதற்காக தேர்தல் ஆணையம் அவரை எச்சரித்து மன்னிக்கிறது. எதிர்காலத்தில் அவர் மிகவும் கவனமாக தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற எச்சரிக்கிறோம்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: