லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்திக் (28). விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி பவித்ரா (27). நேற்று முன்தினம் இரவு கார்த்திக், பால் வாங்குவதற்காக திருவள்ளூர் செங்குன்றம் சாலையில்  பைக்கில் சென்றார். ஈக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நின்றிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர், கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்படி புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>