கோவில்பட்டி அருகே அரசு மருத்துவமனையில் பெண் ஊழியரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட டாக்டர் கைது: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

கோவில்பட்டி:  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி (51), கடந்த 6 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறார். அங்கு வேலைபார்க்கும் 23 வயது தற்காலிக பெண் ஊழியரிடம் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்தாராம். இந்த விவரம் அதே மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலைபார்க்கும் நீலவேணிக்கு (36)தெரிய வந்தது. இதையடுத்து அந்த டாக்டர், இளம்பெண்ணுடன் தனியாக இருப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதில், இளம்பெண்ணை டாக்டர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுதெரிந்து டாக்டர் குருசாமி, நீலவேணியிடம் ”செல்போனில் உள்ள வீடியோக்களை அழிக்காவிட்டால் உன்னை கொன்று விடுவேன்’’ என்று மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுடன் இருந்த நீலவேணி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், டாக்டர் குருசாமியை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். இதனிடையே டாக்டர், இளம்பெண் தனிமையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories:

More
>