சேலம் அருகே கள்ளநோட்டு கும்பல் கைது: ஜெராக்ஸ் மெஷின், 3 டூவீலர்கள் பறிமுதல்

இளம்பிள்ளை: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை பகுதியில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒருவர், போலீசாரை கண்டவுடன் ஓடி உள்ளார். அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த பையில், கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் தப்பக்குட்டை பகுதியை சேர்ந்த பொன்னுவேல் (52) என்பதும், அவரும் மாட்டையாம்பட்டியை சேர்ந்த சதீஷ்(30), சங்ககிரி ஒலக்கசின்னனூர் சின்னத்தம்பி(29) ஆகியோரும் சேர்ந்து, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், கலர் ஜெராக்ஸ் மெஷின், 3 டூவீலர்கள், 1,42,600 மதிப்பிலான கள்ளநோட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் பல இடங்களில் உள்ள வாரச்சந்தைகளிலும், மளிகை கடை, டீக்கடைகள் மற்றும் ஜவுளி கடைகளிலும் 200, 500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 3 பேரையும் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>