கோவையில் பெண்ணிடம் நகை பறித்த காங்கிரஸ் நிர்வாகி கைது

கோவை: கோவை குனியமுத்தூர் கே.ஜி.கே ரோட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (55). மளிகை கடை வைத்துள்ளார். கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த வாலிபர் சிகரெட் கேட்டார். தனலட்சுமி பாக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்த போது அவரது கழுத்தில் இருந்த 5.5 பவுன் நகையை பறித்தார். சிறிது தூரத்தில் ஒரு நபர் பைக்கில் தயார் நிலையில் நின்றார். அதில் ஏறிய வாலிபர், தப்பி சென்றார். சிசிடிவி பதிவை வைத்து கரும்புக்கடையை சேர்ந்த 17 வயதான சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், கோவை மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி துணைத்தலைவரான பைசல் ரகுமான்தான் (30) நகை பறித்தவர் என தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

More
>