ஷாருக்கான் பாஜகவில் சேர்ந்தால் போதை பொருள் சர்க்கரை ஆகிவிடும்: மகாராஷ்டிரா அமைச்சர் கிண்டல்

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த சில வாரங்களுக்கு முன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு நாளை மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பாலிவுட் பிரபலங்கள் போதை வழக்கில் அடுத்தடுத்து கைதாகும் விவகாரத்தை, ஆளும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவை கேலி செய்யும் விதமாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் சாகன் புஜ்பால் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘நடிகர் ஷாருக்கான் பாஜகவில் சேர்ந்தால், போதைப்பொருள் இனிப்பு சர்க்கரையாக மாறிவிடும்.

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் மவுனமாக உள்ளனர்.  அதேநேரம், ஷாருக்கானை வேட்டையாட துடிக்கின்றனர். ஓபிசி ஒதுக்கீடு விசயத்தில் மகாராஷ்டிரா அரசு அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனால் பாஜக நிர்வாகி ஒருவர் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்’ என்றார்.

Related Stories: