14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்வு

சிவகாசி: தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, குடியாத்தம், காவேரிப்பட்டினம் பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பரின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தீப்பெட்டி சங்க நிர்வாகிகள் சிவகாசியில் ஆலோசனை நடத்தி டிச.1ம் தேதி முதல் ஒரு தீப்பெட்டி விலையை ரூ.2 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளனர். கடந்த 2007ல் 50 காசாக இருந்த தீப்பெட்டி 1 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு 2 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: