தென்னேரி கரையில் தடுப்பு சுவர்: விவசாயிகள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்று தென்னேரி. இதன் கொள்ளளவு 18 அடி. இந்த ஏரி நீர் மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது தென்னேரிக்கு நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த தென்னேரியின் மூலமாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முப்போக நெல் பயிரிட்டு வருகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளாக சுங்குவார்சத்திரம்-வாலாஜாபாத் 4 வழி சாலை விரிவாக்கத்தின்போது, தென்னேரியின் கரைகளை பலப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் மூலமாக தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது இப்பணி கிடப்பில் உள்ளது. பருவ மழை துவங்குவதற்கு முன், தென்னேரியின் கரைகளில் தடுப்பு சுவர் கட்டும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: