உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்: 2 வேன்கள் பறிமுதல்

திருவள்ளூர்: சென்னை வடக்கு சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், ஜி. மோகன் ஆகியோர்  திருவள்ளூரை அடுத்த உளுந்தை, மப்பேடு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 15 வாகனங்கள் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போக்குவரத்து துறை அலுவலர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி இயங்கிய வாகனங்களுக்கு ₹ 97 ஆயிரம் சாலை வரியும் மற்றும் ₹ 1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்தனர். அதோடு மட்டுமில்லாமல் வரி செலுத்தாதது மற்றும் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயங்கிய 2 தனியார் கம்பெனி  வேன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து  மப்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: