ரயில்வே வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவரை காரில் கடத்திய தம்பதி கைது

ஆலந்தூர்: வேளச்சேரி கருணாநிதி தெருவை சேர்ந்த கார்த்திக், தனது தந்தை சிவராமனை (65), ஒரு கும்பல் காரில் கடத்தியதாக நேற்று முன்தினம் இரவு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிவராமனின் செல்போன் எண்ணை வைத்து தேடியபோது, அவர் கோயம்பேட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று அவரை மீட்டனர். அவரை கடத்திய திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50), இவரது மனைவி பாக்கியலட்சுமி (35) மற்றும் கிருஷ்ணன் (32) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், ரயில்வே வேலை வாங்கி தருவதாக சிவராமன் மேற்கண்ட மூவரிடம் ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டதும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிவராமனை கடத்தியதும் தெரிந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

More
>